About the Programme
தமிழ்த்துறை 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இளங்கலை, அறிவியல் துறை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நான்கு பருவங்களாக இரண்டாண்டுக்கு பகுதி - ஒன்று தமிழ்த்தாள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அடிப்படையில் இப்பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியச் சோலை, கணித்தமிழ்ப்பேரவை, மாணவர் வாசகர் வட்டம் என்ற பல்வேறு அமைப்புகள் தமிழ்த்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. ‘தமிழ் இலக்கிய சோலை’ என்ற இலக்கிய மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு போட்டிகளும் பிற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றது. ‘கணித்தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பு 2023 அன்று தொடங்கப்பட்டு கணினியில் தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ‘மாணவர் வாசகர் வட்டம்’ என்ற பேரவை 2023 அன்று தொடங்கப்பட்டு மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தி வருகின்றது.
நோக்கம்
➤ மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்துதல்.
➤ பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கான திறனை மேம்படுத்துதல்.
➤ கலையின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்குத் தொண்டாற்றிட வழிகாட்டுதல்.
குறிக்கோள்
➤ செம்மொழித் தமிழைச் செம்மையாகப் பேசவும் எழுதவும் பயிற்றுவித்தல்.
➤ தமிழின் தொன்மையையும் பெருமையையும் அறியச் செய்தல்.
➤ தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிண ஊக்குவித்தல்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
|